Thursday, January 9, 2014
விதை காப்பாளர்கள் – (3)
Dr. Debal Deb
வேத காலத்தில் லட்சங்களிலிருந்தாகக் கூறப்படும் நெல் வகைகள் திரு.R.H.ரிச்சாயா (1960களில் ) காலத்தில் 20,000 குறைந்தது. இன்று (2012இல்) 700 பாரம்பரிய அரிசி வகைகளை வைத்திருக்கும் Dr.திபால் திப் 1997 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவைகளை விதைத்து பாதுகாத்து வருகிறார். இவை ஒவ்வொன்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வசிக்கும் ஏழை விவசாயிகளிடம் சேகரிக்கப்பட்டவை, சிறப்பான குணங்களை உடையவைகள். வெள்ள சமயங்களில் நீர் தேங்குதல், மற்ற நேரங்களில் நீர் பற்றாக்குறை, உப்பு தன்மையை தாங்கி வளர்பவையாக, நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவையாக, சில வகை மணம் நிறைந்ததாக இருக்கின்றன. ஒரு தனி மனித சாதனை என்று கூறலாம். கம்பெனிகளுக்கு பணிவிடை செய்யாமல் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவ்வளவு விதைகளையும் சிறிய இடத்தில் விதைத்து அறுவடை செய்து காப்பாற்றி வருவதோடு அவற்றை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி அவர்களை பயிர் செய்ய வைத்து வாழ்கையில் ஒளியேற்றி வருகிறார். இந்திய விவசாய தற்கொலைகள் (2011 - 14,027) அதிகமாக ஒருகாரணம் விவசாயிகளிடம் விதை தற்சார்பு இல்லாமையாகும். இந்த விதை தற்சார்பு பரவாலக்கப்பட்டால் இந்திய விவசாயம் பிழைக்கும். இதனை படிக்கும் அன்பர்கள் விதை தற்சார்பு பற்றி உங்களுக்கு தெரிந்ததை பதிவேற்றினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள். Dr.திபால் திப் தலைவராக உள்ள அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://www.cintdis.org/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment